search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை திருமணம் நிறுத்தம்"

    கொடைக்கானல் மலை கிராமத்தில் 9-ம் வகுப்பு மாணவிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே உள்ள மலை கிராமமான புளியன்கோம்பையில் 9-ம் வகுப்பு படித்து முடித்த மாணவிக்கும் 37 வயதுடைய ஆணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இது குறித்து சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சைல்டு லைன் குழுவினர், மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா, கிராம சேவகர் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தைச் சேர்ந்த பிரவீன் ஆகியோர் புளியன்கோம்பை கிராமத்துக்கு சென்றனர்.

    மாணவியின் பெற்றோரிடம் 18 வயதுக்கு குறைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் குற்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என எடுத்துரைத்து அவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

    18 வயது நிரம்பாமல் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் துணை மைய இயக்குனர் ராஜா முகமது தெரிவிக்கையில் சிறுமிக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு 18 வயது வரை சைல்டு லைன் பாதுகாப்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பள்ளி இடை நிற்றல் குழந்தைகளால்தான் பெரும்பாலும் இளம் வயது திருமணங்கள் நடக்கிறது. இது குறித்து மலைகிராமங்களில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

    திண்டிவனம் அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அச்சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே பாமூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 28). இவர் புதுவையில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ஊரல் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் வருகிற 25-ந் தேதி திண்டிவனம்-செஞ்சி ரோட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தீவிரமாக செய்து வந்தனர்.

    இந்நிலையில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பதாக திண்டிவனம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, ரோசனை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் போலீசார், வருவாய் ஆய்வாளர் விஜயபாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் உமாராணி, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் கமலாட்சி ஆகியோர் 17 வயது சிறுமியின் வீட்டுக்கு சென்று, அவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 18 வயதுக்குட்பட்ட சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. 17 வயது சிறுமி விழுப்புரம் குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
    ×